Monday, November 03, 2008

சுஜாதாவின் அட்வைஸை மதிக்காத பதிவர் பினாத்தல் சுரேஷ்- by கி அ அ அனானி

கி அ அ அனானியிடமிருந்து மடல், அரசியல் கலக்காத சாத்வீகமான மேட்டர் for light reading :) . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
எ அ பாலா
************************************

எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்தில் சின்னச் சின்ன விஷயங்களை அனுபவ பூர்வமாகவும் ,சுவையாகவும் படிப்பவருக்கு பயனுள்ள வகையிலும் சொல்லும் ஆற்றல் இருக்கும்। உதாரணத்துக்கு 1997 ல் "சுஜாதாட்ஸ்"என்ற கட்டுரைத் தொகுப்பில் சென்னை ட்ராபிக் பற்றி தனக்கே உரிய பாணியில் சுவையாக எழுதியிருக்கிறார் (5/11/08 தேதியிட்ட குமுதத்தில் வந்திருக்கிறது) அதில்

" எந்த ட்ராஃபிக் விளக்கிலும் ஒரு பல்ப்பாவது எறியாது।அம்பர்-மஞ்சள் இருந்தால் மிக வேகமாகப் போகலாம்.ஆனால் ஒரு கண்டிஷன்.பாதியில் சிகப்பு வந்தால் மென்னியைப் பிடிப்பது போல் பிடேக் போடாதீர்கள்.உமக்குப் பின்னால் மூணு பேர் உம்மை நம்பி அதே வேகத்தில் வந்து கொண்டிருப்பார்கள்.பகவான் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு போய்க் கொண்டே இருங்கள்"

என்று எழுதியிருந்ததைப் படித்ததும் இந்த உபதேசத்தைப் பின்பற்றாமல் சமீபத்தில் கோயம்பேடு சிக்னலில் நல்ல பிள்ளையாய் ப்ரேக் அடித்து கழுத்தெலும்பை உடைத்துக் கொண்ட பினாத்தல் சுரேஷ்

ஞாபகம்தான் வந்தது . :)

பினாத்தலாரே..சுஜாதாவை படிச்சா மட்டும் போதாது..அட்வைசை ஃபாலோவும் பண்ணணும் :)

சென்னை ட்ராபிக் பற்றி சுஜாதா அதே கட்டுரையில் எழுதியிருக்கும் இன்னும் சில விஷயங்கள்
************************************

சென்னை போக்குவரத்துக்கென்று சில தனிப்பட்ட எழுதப்படாத விதிகள் இருக்கின்றன.அவைகளை சென்னையின் சாலைகளை பயன்படுத்துவோர் அறிந்து கொள்வது முக்கியம்.எந்த நிமிடமும் நீங்கள் கீழ்க்காணும் நிகழ்ச்சிளை சாலையில் எதிர்பார்க்கலாம்.

திடீர் என்று எதையோ மறந்து விட்ட சைக்கிள்காரர் சரேல் என்று திரும்பி "யு" டர்ன் அடிப்பது

பஸ்களின் பின்பக்க வாசலிலிருந்து எந்த தருணத்திலும் எந்த வேகத்திலும் பயணிகள் உதிர்ந்து,கொஞ்ச தூரம் ஓடி சமாளிப்பார்கள்.அவர்கள் மேல் உங்கள் வாகனத்தை ஏற்றி விடக் கூடாது.

ஆட்டோ ரிக்ஷாக்கள் காட்டும் கை சிக்னல்கள் ஏறக்குறைய மனசுக்குள்தான் இருக்கும்.அரிதாக ஒரு விரல் மட்டும் காட்டி விட்டு சரேல் என்று திரும்புவார்கள்.உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பஸ் எப்போதும் எங்கேயும் நிற்கும்.பஸ் நிறுத்தத்தில் மட்டும் அவை நிற்க்க வேண்டும் என்றில்லை.அப்படி நின்றாலும் நடுத்தெருவில் நிற்கும்.

எந்த சாலை விபத்திலும் பெரிய வண்டிதான் குற்றவாளி.,பாதசாரி-சைக்கிள் விபத்தில் சைக்கிள்காரர்தான் காரணம்,சைக்கிள்-ஸ்கூட்டரில் ஸ்கூட்டர்தன்,ஸ்கூட்டர் ஆட்டோவில் ஆட்டோ,ஆட்டோ-கார் என்றால் கார்,கார் -பஸ் என்றால் பஸ்,பஸ் -ரோடு இஞ்சின் என்றால் ரோடு இஞ்சின்.

தண்ணீர் லாரிகளும் சைலன்சர் இல்லாத கார்ப்பரேஷன் குப்பை லாரிகளும் தனிச்சையாக இயங்குபவை.அவர்களுக்கு எந்த ரூலும் கிடையாது.

************************************


இந்த 2008 ஆம் ஆண்டில் இன்னும் பொது மக்களைக் கொலை நடுங்க வைக்க "ஷேர் ஆட்டோக்களும்" சேர்ந்து கொண்டுள்ளன என்பது தவிர வேறு ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்ன? :)

கி அ அ அனானி

19 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test :)

Raghav said...

கண்டிப்பாக பாலா.. சுஜாதா அவர்களின் “சுஜாதாட்ஸ்” புத்தகம் நேத்து தான் ஊருக்கு போoயிட்டு வரும்போது வாங்கி வந்தேன்.. இனி தான் படிக்கணும்.. கண்டிப்பா புத்தகம் வறட்டு அறிவுரையா இருக்காதுன்னு நம்புறேன்..

உங்கள் அரசியல் சாரா பதிவுகளின் வாசகன்.
ராகவன்.

இலவசக்கொத்தனார் said...

யோவ் கி அ அ அ அ

சுஜாதா எல்லாம் படிச்சுப் பாலோ பண்ணினா பெரிய இளக்கியவியாதியா ஆக முடியுமாய்யா? அதுக்கு எல்லாம் லத்தீன் அமெரிக்க இளக்கியம் படிக்கணும், ப்ரெஞ்ச் இளக்கியம் படிக்கணும். வந்துட்டாரு பெரூஊஊசாப் பதிவு போட.

ஒரு வேளை பெனாத்தல் எந்த மொட்டை மாடியில் எந்தக் குட்டியை, சாரி எந்தக் கொட்டையை, ச்சீ சாரி அகெய்ன், கோட்டையைப் பிடிக்கறதுன்னு ரோசனை பண்ணிக்கிட்டுப் போனாரோ என்னமோ.

அப்புறம் நன்றி குமுதம் அப்படின்னு போட்டாக் குறைஞ்சா போவீரு?

டிஸ்கி: இந்த பதிவில் அரசியல் கலக்கவில்லை என்பதில் ஆரம்பித்து பதிவு பூரா வியாபித்து இருக்கும் நுண்ணரசியலைப் பற்றிப் பேசத் தொடங்கினால் ஆபீஸ் போக முடியாது என்பதால் அமுக்கி வாசிக்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

நிம்மதியா அடி கூட பட்டுக்க முடியலப்பா இந்தக்காலத்துல.. அன்னிக்கே அட்வைஸ் பண்ணாரு கேட்டியான்னுகிட்டு! கி அ அ அ அ அ அ அ , என் செலவில பொங்கல்.. நல்லா இருந்திச்சா?

தருமி said...

எந்த சாலை விபத்திலும் பெரிய வண்டிதான் குற்றவாளி//
100% correct.........

said...

பாலா அவர்களுக்கு

பதிப்பித்தமைக்கு நன்றி

///கி அ அ அனானியிடமிருந்து மடல், அரசியல் கலக்காத சாத்வீகமான மேட்டர் for light reading :) ///

இப்படி எழுதி விட்டு பதிவை வெள்ளை பேக்ரவுண்டில் கருப்பு ,சிவப்பு எழுத்துக்களில் போட்டால் எப்படி ?

கி அ அ அனானி

said...

இலவசக் கொத்தனார்,

பாலிடிக்ஸ் இல்லாம பதிவு அப்படீன்னு சொன்னதுக்காக பின்னூட்டத்துல பாலிடிக்ஸா? :)

மேலும்
---(5/11/08 தேதியிட்ட குமுதத்தில் வந்திருக்கிறது) ---
அப்படீன்னு பதிவுலேயே எழுதியிருகிறதே அது தவிர தனியாக "நன்றி" அப்படீன்னு போடணுமா, அவனவன் பேப்பர்ல வந்த செய்தியை அச்சுப் பிசகாம படிவு போட்டுட்டு அந்த மாதிரி போட்டா " நன்றி" அப்படீன்னு போடுறது "குறைந்த பட்ச நாகரீகம்" அப்படீன்னு யாராவது சுட்டிக் காட்டினால் "I the silent " ன்னு இருக்கானுவோ, என்னை சொல்ல வந்துட்டீங்க ??
புரியுது ,புரியுது எந்தப் பதிவுன்னு கேக்க வர்ரீங்க "பர பரப்பா" தேடிப் பாத்தா கிடைக்கும்.தெரியலைனா இதையே உங்களுடைய அடுத்த குருக்கெழுத்துப் போட்டியில் க்ளுவாக வைத்து விடுங்கள்.யாராவது விடை சொன்னாலும் சொல்லலாம் :)

கி அ அ அனானி

said...

பினாத்தல்

ஹி,ஹி,ஹி

உங்களைக் "கைப்பிள்ளை" ஆக்கி கும்முறதில் இலவசக் கொத்தனாருக்கு உள்ள ஆசையைப் பாருங்கள் :)

கி அ அ அனானி

Sanjai Gandhi said...

இப்போ கோயமுத்தூருக்கும் இதெல்லாம் பொருந்துங்ணா.. :)

/பஸ்களின் பின்பக்க வாசலிலிருந்து எந்த தருணத்திலும் எந்த வேகத்திலும் பயணிகள் உதிர்ந்து,கொஞ்ச தூரம் ஓடி சமாளிப்பார்கள்.அவர்கள் மேல் உங்கள் வாகனத்தை ஏற்றி விடக் கூடாது.
//

இது பரவால்லா.. எங்கூர்ல ட்ரைவர் ப்ரேக் போட்டதும் உள்ள இருந்து 4 பொண்ணுங்க உருண்டு வந்து வெளிய விழுந்தாங்க.. பாவம் அடிதான் பலமா போய்டிச்சி.:(

Sridhar Narayanan said...

//கி அ அ அ அ அ அ அ , என் செலவில பொங்கல்.. நல்லா இருந்திச்சா?//

இதுல கி, ஒரு அ-வும்தான் புரியுது. மிச்சமெல்லாம் அவர் படிச்சு வாங்கின பட்டங்களா? புதசெவி :)

Sridhar Narayanan said...

அரசியலை நுணுக்கினா 'அ'. கி அ அ அ அ அ -னா எவ்ளோ நுண்ணரசியல் இருக்குது பாருங்க. இதைத்தான் கொத்தனார் 'பதிவு முழுசும் விரவிக் கிடக்கும் நுண்ணரசியல்'ன்னு சொல்றாரோ? புதசெவி :-)

said...

தருமி ஐயா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

கி அ அ அனானி

சஞ்சய்
இன்றிய காலகட்டத்தில் அனைத்து பெரிய நகரங்களுக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ராஷ் ட்ரைவிங்கினால் வாகனத்துக்குள்ளே பயணிப்பவருக்கு நடக்கும் கலாட்டாக்களைப் பற்றி தனிப் பதிவே போடலாம் .

கி அ அ அனானி

said...

வாங்க ஸ்ரீதர் நாராயணன்

எந்த நேரத்துல பாலா சார் கி அ அ அனானினு சொல்ல ஆரம்பித்தாரோ, இவங்க பாட்டுக்கு அ சேத்து ஆலாபனையை நீட்டிக்கிட்டே போறாங்க :)

(திருவிளையாடல் ஸ்டைலில்)பிரிக்க முடியாதது - இலவசக் கொத்தனாரும் நுண்ணரசியலும் :)

கி அ அ அனானி

enRenRum-anbudan.BALA said...

என் வாசகர் ராகவ்வுக்கும், மற்ற கி.அ.அ.அ வாசகர்களுக்கும் நன்றி.

Sridhar Narayanan,

//இதுல கி, ஒரு அ-வும்தான் புரியுது. மிச்சமெல்லாம் அவர் படிச்சு வாங்கின பட்டங்களா?
//
இதை வாசிச்சதும் "வேதம் புதிது" படத்துல வரும் வசனம் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது! (சத்யராஜ் வீட்டில் வளரும் பிராமணச் சிறுவன் சத்யராஜைப் பார்த்துச் சொல்லுவது!) அதை நினைச்சு தான் இப்டி எழுதினீங்களா ???? :)

எ.அ.பாலா

யோசிப்பவர் said...

//இதை வாசிச்சதும் "வேதம் புதிது" படத்துல வரும் வசனம் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது! (சத்யராஜ் வீட்டில் வளரும் பிராமணச் சிறுவன் சத்யராஜைப் பார்த்துச் சொல்லுவது!) அதை நினைச்சு தான் இப்டி எழுதினீங்களா ????//
சின்னப் புள்ளையாவே இருக்கீங்க பாலா!!:))

//கீழ்க்காணும் நிகழ்ச்சிகலை //
//நடுத்தெறுவில்//
எழுத்துப் பிழைகள்!!:(

enRenRum-anbudan.BALA said...

யோசிப்பவரே,
கருத்துக்கு நன்றி, நீங்கள் சொன்னது புரியாவிட்டாலும் :)

//எழுத்துப் பிழைகள்// கி.அ.அ.அனானி தமிழ்ல கொஞ்சம் வீக், ஆனா நக்கல் பண்றதுலே ஸ்ட்ராங்க்! எனக்கும் திருத்திப் போடறதுக்கு பொறுமை இல்ல :(

எ.அ.பாலா

said...

present sir :)

CA Venkatesh Krishnan said...

இப்பொழுதுதான் குமுதத்தில் படித்தேன்.

படித்ததும் பினாத்தலாரின் நிகழ்வுதான் ஞாபகம் வந்தது.:(

enRenRum-anbudan.BALA said...

இளைய பல்லவன்,
நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails